27 May 2025
Credit: Getty
கிர்ணி பழத்தில் உள்ள 90% நீர்ச்சத்து உடலை எப்போதும் நீரேற்றத்துடனும் குளிர்ச்சியுடனும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. .
இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, சளி மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. .
கிர்ணி பழத்தில் உணவு நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக நிறைந்துள்ளன. இது குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை குணமாக்குகிறது. .
இதில் உள்ள பொட்டாசியம் இதய தமனிகளின் அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
கிர்ணியில் கண்களுக்கு நன்மை தரும் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் பார்வைத்திறனை மேம்படுத்தும். மாலைக்கண் நோயைத் தடுக்கிறது. .
கிர்ணி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதைச் சாப்பிடுவதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவாகிறது. .
இதில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் சருமத்தை என்றும் இளமையாகவும், சுருக்கங்கள் இல்லாமலும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. .
இப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்தி, முடி உதிர்வைத் தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சியைத் தருகிறது. .
இதில் உள்ள பொட்டாசியம் நரம்புகளை தளர்த்தி, மன அழுத்தத்தைக் குறைப்பதோடு இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கிறது.
இதில் உள்ள ஆக்ஸிகைன் என்ற கலவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. மேலும், இதன் இயற்கையான நச்சு நீக்கும் பண்புகள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. .