29 May 2025
Credit: Freepik
காலிஃபிளவர் விலை மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறியாகும்.
காலிஃபிளவரில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.
காலிஃபிளவரில் உள்ள ஃபோலேட் மற்றும் பி6 ஆகியவை நரம்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குவதோடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
காலிஃபிளவரில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் இது பயனுள்ளதாக அமைகிறது.
காலிஃபிளவரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் செல் சேதத்தைத் தடுத்து, முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.
காலிஃபிளவரில் உள்ள கந்தகச் சேர்மங்கள், கல்லீரலைச் சுத்தப்படுத்தவும் உடலில் உள்ள நச்சுகளை அகற்றவும் உதவுகின்றன.
காலிஃபிளவரில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்குவதோடு, இறந்த சரும செல்களைக் குறைக்கவும் செய்கின்றன.
காலிஃபிளவர் எடுத்து கொள்வது சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும், கரும்புள்ளிகளைக் குறைக்கவும் கூட உதவும்.
காலிஃபிளவர் இரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்தவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.