23 July 2026
Credit: Getty
உணவே மருந்து என்ற தமிழர்களின் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணவு தான் அரை நெல்லிக்காய். இது பல ஆராக்கிய பலன்களை கொண்டுள்ளது.
அரை நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
அரை நெல்லிக்காயில் அதிக அளவு நார்சத்து உள்ளது. அது உடலில் செரிமான பாதையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவி செய்கிறது.
மேலும் அரை நெல்லிக்காய் பசியின்மை, அஜீரணம் மற்றும மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான சிக்கல்களுக்கு நல்ல தீர்வாக உள்ளது.
அரை நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
இதன் காரணமாக சருமம் பொலிவாக மாறுவது மட்டுமன்றி, முகப்பரு உள்ளிட்ட சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்.
இலங்கை மற்றும் இந்திய பாரம்பரியத்தில் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்த அரை நெல்லிகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அரை நெல்லிகாய் கல்லீரலில் தேங்கு கொழுப்பை குறைத்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவி செய்கிறது.
அரை நெல்லிக்காயில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்டுகள் கணையத்தில் இன்சுலின் சுரப்பதை சீராக்க உதவி செய்கிறது.
இதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.