17 Dec 2025
Credit: Social Media
கேரளாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் படத்தில் மூலம் பிரபலமானார்.
குறிப்பாக அந்தப் படத்தில் அவர் கண்ணடிக்கும் வீடியோ ஒன்று இந்திய அளவில் டிரெண்டானது.
இதனையடுத்து தேசிய அளவில் பிரியா பிரகாஷ் வாரியர் டிரெண்டானார்.
இதனையடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இஷ்க் பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மலையாளம், மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு அவர் நடிப்பில் தமிழில் குட் பேட் அக்லி மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் வெளியாகின.
இதில் குட் பேட் அக்லி படத்தில் இவர் நடனமாடிய தொட்டு தொட்டு பேசும் பாடல் மிகவும் பிரபலமானது.
இதுவரை 2 பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இவர் நடிப்பில் 3 மங்கீஸ், லவ் ஹேக்கர்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.