28 May 2025 

நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?

Credit: Getty Image

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட வழிமுறைகளின் படி நல்ல முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது என பார்க்கலாம்.

முட்டையில் புரதம் மட்டுமல்லாமல் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் அது சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது. 

முட்டையின் தரத்தை சோதிப்பதற்கு முதலில் மூன்று டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். 

டம்ளர் நீரில் முட்டையை போடும்போது அது நீரின் அடிப்பகுதிக்கு சென்றால் அது புதியது என தெரிந்துகொள்ளலாம். 

முட்டை நீரில் முழுமையாக மூழ்காமல் செங்குத்தாக நின்றால் அது  பழையது என்று அர்த்தம்.

முட்டை நீரில் மூழ்காமல் மிதந்தால் அந்த முட்டை கெட்டுப்போய்விட்டதாக அர்த்தம்.

கெட்டுப்போன முட்டைகளை சாப்பிட்டால் நமக்கு பல நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.