20 Jun 2025

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

Credit: Freepik

ஆரஞ்சில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே, இதனை இரவில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி (அமிலத்தன்மை) பிரச்சினையை அதிகமாக்கி தூக்கத்தைக் கெடுக்கும்.

ஆரஞ்சு

தக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் உள்ளன. இதனால் இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டால் வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

தக்காளி

உடல் நலத்திற்கு நல்லது என்றாலும், இரவில் ப்ரோக்கோலி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

ப்ரோக்கோலி

காலிபிளவரும் செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். இரவு நேரத்தில் செரிமான மண்டலத்தின் வேகம் குறைவதால், இது தூக்கத்திற்கு இடையூறாக மாறும்.

காலிபிளவர்

டார்க் சாக்லெட்டில் 'காபின்' (Caffeine) உள்ளது. இது மூளையை விழித்திருக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது என்பதால், இரவில் சாக்லெட் சாப்பிடுவது தூக்கம் வருவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

சாக்லெட்

பாதாம் ஆரோக்கியமானது என்றாலும், அதில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை இரவில் சாப்பிடும்போது செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொண்டு, வயிற்றைக் கனமாக உணரச் செய்யும்.

பாதாம்

பாதாமைப் போலவே முந்திரியிலும் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், இரவு நேரத்தில் செரிமான மண்டலத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி தூக்கத்தைப் பாதிக்கும்.

முந்திரி

தயிர் உடலுக்குக் குளிர்ச்சி என்றாலும், இரவில் உட்கொள்வது சிலருக்கு வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

தயிர்

அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள் உடலின் வெப்பநிலையை உயர்த்துவதோடு, கடுமையான நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தி நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும்.

கார உணவுகள்

சீஸ் (பால்கட்டி) போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானப் பாதையை மெதுவாக்கும். மேலும், இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி தூக்கத்தைத் தள்ளிப்போடும்.

சீஸ்