05 July 2025
Credit: Freepik
ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சியும், ஜிம்மும் முக்கியமான செயல்பாடுகள் ஆகும்.
தங்கள் வலிமையையும், உடல் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ளவும், சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
இருப்பினும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் உடற்பயிற்சியுடன் சேர்த்து உணவுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உடற்பயிற்சிக்கு பிறகு, எல்லாவற்றையும் சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. சில உணவுகள் உடற்பயிற்சியின் நன்மைகள் குறைத்துவிடும்.
பொரித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக்கும்.
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்க செய்து, ஆற்றல் குறைவதற்கு காரணமாகலாம்.
கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை செரிப்பது கடினம். மேலும், உடற்பயிற்சிக்கு பிறகு அவற்றை உட்கொண்டால் அசௌகரியமாக இருக்கலாம்.
காரமான உணவுகள், பால் பொருட்கள் மற்றும் மதுபான ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை செரிமானத்தை பாதிக்கும்.
முடிந்தவரை உடற்பயிற்சிக்கு முன்பும், பின்னும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டை, கொண்டைக்கடலை உள்ளிட்ட உணவுகளை சேர்த்து கொள்வது சிறந்த ஆற்றல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும்.