15 July 2025

நோய்களை தவிர்க்க வைட்டமின் B1 உள்ள உணவுகள்!

Credit: GETTY

தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை விடவும், தவிடு நீக்கப்படாமல் உள்ள பழுப்பு நிற அரிசியில் அதிக அளவிலான வைட்டமின் பி1 சத்து உள்ளது. 

கைக்குத்தல் அரிசி 

காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும்போது உடலுக்கு தேவையான வைட்டமின் பி1 சத்து கிடைப்பதை உறுதி செய்ய முடியும். 

ஓட்ஸ்

பச்சைப்பயறு, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயறு வகைகளை உணவில் அன்றாடம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான வைட்டமின் பி1 கிடைக்கும்.

கொண்டைக்கடலை

சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி1 சத்து பெற இந்த சோயா பீன்ஸ் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

சோயாபீன்ஸ்

சூரிய காந்தி விதைகளை மிக குறைந்த அளவு எடுத்துக்கொண்டாலே ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் பி1 சத்தை பெற முடியும். 

சூரிய காந்தி விதைகள் 

மிக மலிவாகவும், எளிதில் கிடைக்கக்கூடிய வேர்க்கடலையில் வைட்டமின் பி1 சத்து மற்றும் கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ளன.

வேர்க்கடலை

பன்றி இறைச்சி, கல்லீரல் உள்ளிட்டவற்றில் அதிக அளவிலான வைட்டமின் பி1 சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இறைச்சி 

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் பி1 மற்றும் பிற பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன.

முட்டை

இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் பி சத்து அதிகம்  உள்ளது. அதுமட்டுமன்றி, தியாமின் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளது. 

பச்சை பட்டாணி

இலை வடிவ கீரைகளில் இந்த வைட்டமின் பி1 அதிக அளவு உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

முருங்கைக்கீரை