14 Jun 2025

கூந்தலுக்கு வெந்தயத்தின் நன்மைகள்..!

Credit: Freepik

முடி உதிர்தல் முதல் பொடுகு வரை வெந்தயம் கூந்தலுக்கு பல வகைகளில் நன்மை தரும்.

வெந்தயம்

வெந்தயத்தில் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் நிக்கோடினிக் அமிலம் நிறைந்துள்ளது.

நிக்கோடினிக்

அதன்படி, வெந்தயம் மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்தலை குறைக்க உதவி செய்யும்.

மயிர்க்கால்

வெந்தயத்தின் உள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை அளித்து புதிய முடி வளர உதவும்.

புதிய முடி

வெந்தயத்தில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்சனையை சரி செய்யும்.

அரிப்பு

வெந்தயத்தை அரைத்து தலையில் தடவுவதன்மூலம் முடி மென்மையாகவும், பட்டு போன்றதாகவும் மாறும்.

மென்மை

வெந்தயம் உச்சந்தலையில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கும்.

உச்சந்தலை

வெந்தயத்தில் உள்ள இயற்கையான கோழை போன்ற பொருள், முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து வறட்சியை குறைக்கும்.

ஈரப்பதம்

வெந்தயத்தை அரைத்து பயன்படுத்துவது தலையில் நுனிப்பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

நுனிப்பிளவு

வெந்தயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இளவயதிலேயே முடி நரைக்கும் அபாயத்தை குறைக்கும். 

முடி நரை