23 September 2026
Credit: Instagram
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல் ஹாசனின் மகளாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்பே சினிமாவில் பாடல்களைப் பாடி பிரபலம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்தும், அம்மாவாக ஆவது குறித்தும் பேசியுள்ளார்.
அந்தப் பேட்டியில் திருமணத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைக்கு அம்மாவாக இருக்க ஆசை இருக்கிறது என்று கூறிய ஸ்ருதி ஹாசன் குழந்தையை தத்தெடுப்பது குறித்தும் பேசியுள்ளார்.
முன்னதாக சாந்தனு ஹசாரிகா என்பவரை டேட் செய்து வந்த ஸ்ருதி ஹாசன் பிறகு அவருடன் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் திருமணத்தில் ஆர்வம் இல்லைனாலும் அம்மாவாக அதிக ஆர்வம் இருக்கிறது என்றும் தெளிவாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.