14 July 2025

தாஜ்மஹாலின் வியக்க வைக்கும் உண்மை வரலாறு!

Credit: GETTY

தாஜ்மஹால் உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அழகான நினைவுச் சின்னமாகும்.

அதிசயம்

முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டினார். இது காதலின் சின்னமாக அறியப்படுகிறது.

காதல்

பேரரசி மும்தாஜ் 1631-ஆம் ஆண்டு தனது 14-வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது உயிரிழந்தார். அவரது எதிர்பாராத மறைவு பேரரசர் ஷாஜகானை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.

மறைவு

மும்தாஜின் நினைவைப் போற்றும் வகையில் 1632-ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆரம்பம்

தாஜ்மஹாலின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் சுமார் 22 ஆண்டுகள் வரை நீடித்தன.இதன் பணிகளும் முழுமையாக நிறைவடைந்து 1653ம் ஆண்டு இது கட்டி முடிக்கப்பட்டது.

காலம்

தாஜ்மஹால் முழுவதும் முற்றிலும் வெண்மையான உயர்தர பளிங்குக் கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது.

பளிங்கு

இதில் இஸ்லாமிய, பாரசீக மற்றும் இந்தியக் கட்டடக்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. குர்ஆன் வசனங்களின் எழுத்து கலை மற்றும் சமச்சீர் வடிவமைப்பு இதன் முக்கிய அம்சம்.

கலை

காலை, மதியம் மற்றும் நிலவொளி இரவுகளில் சூரிய மற்றும் சந்திர ஒளிக்கேற்ப இது நிறம் மாறுகிறது.

நிறம்

கடந்த 1983-ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற UNESCO அமைப்பால் இது உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலகளவில் இந்தியாவின் கலை மற்றும் வரலாற்றின் பெருமையை உயர்த்துகிறது.

அங்கீகாரம்

தேங்காய் துவையல் அரைக்கும்போது சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும். இது தனித்துவமான நறுமணத்தையும் தரும்.

சுற்றுலா