04 SEP 2026

இளநீர் உண்மையிலேயே தண்ணீருக்கு மாற்றா?

Credit: Freepik

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ஆம் தேதி உலக தேங்காய் தினமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தினம்

சவாலான காலங்களில் உணவு மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே இந்த ஆண்டின் முக்கிய கருப்பொருளாகும்.

கருப்பொருள்

இளநீரில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

சத்துக்கள்

 அன்றாட இயல்பான தாகத்தை போக்கவும் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கவும் சாதாரண குடிநீரே போதுமானது.

தண்ணீர்

அதிக வேர்வை வெளியேறும் கடுமையான உடற்பயிற்சிக்கு இளநீரில் உள்ள சோடியத்தின் அளவு போதுமானதாக இருக்காது.

உடற்பயிற்சி

இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளதால், இது சர்க்கரையே இல்லாத பானம் அல்ல.

சர்க்கரை

பாக்கெட் இளநீரில் சர்க்கரை சேர்க்கப்படலாம் என்பதால் மரத்திலிருந்து பறிக்கப்படும் இயற்கை இளநீரே சிறந்தது.

இயற்கை

பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

சிறுநீரகம்

செயற்கை குளிர்பானங்களுடன் ஒப்பிடும்போது இளநீர் குறைந்த கலோரிகளையும் அதிக நன்மைகளையும் கொண்டது.

கலோரி

 வெயில் காலத்திலும் லேசான உடற்பயிற்சிக்கு பிறகும் உடனடி புத்துணர்ச்சி பெற இளநீர் மிகவும் உகந்தது.

புத்துணர்ச்சி