28 Dec 2025
Credit: Freepik
பளபளப்பான சருமத்திற்கு வைட்டமின் சி மிகவும் அவசியமாகும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே ஈரப்பதம் இருக்கும். இதன் காரணமாக பப்பாளி பழத்தை சாப்பிடும்போது சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சரும பிரச்னைகளை போக்கி, வயதாவதை மெதுவாக்கும்.
தர்பூசணி பழத்தில் நார் சத்து மற்றும் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளது. அது, சருமத்தை மென்மையாக்கும்.
அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை உள்ளன. இதனை உட்கொள்ளும்போது சருமம் மிகவும் பொலிவுடன் இருக்கும்.
மாம்பழத்தில் வைட்டமின் சி, இ மற்றும் சி அதிகம் உள்ளது. இது முகத்தில் இருக்கும் சுருக்கத்தை குறைக்க உதவும்.
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. இது சருமம் வயதாவதை மெதுவாக குறைக்கிறது.
ஆப்ரிக்காட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது முக பருக்களை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.
ஸ்டராபெர்ரி பழத்தில் சாலிசிலிக் ஆசிட் அதிகமாக உள்ளது. இது சரும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மஸ்க் மெலன் பழத்தில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.