08 Jun 2025
Credit: GETTY
ஃப்ரிட்ஜில் இருக்கும் பழைய மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை உடனே அகற்றுவது துர்நாற்றத்தை குறைக்கும்.
ஃப்ரிட்ஜின் உள்ளே இருக்கும் தட்டுகள் மற்றும் மூலைப்பகுதிகளை சுத்தமாக துடைப்பது வாசனையை கட்டுப்படுத்தும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்ட வாசனை குறைய உதவும்.
காபி பொடி அல்லது காபி பீன்ஸ் வைத்து விட்டால் துர்நாற்றத்தை உறிஞ்சி புத்துணர்ச்சி தரும்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோலை ஃப்ரிட்ஜில் வைத்தால் நல்ல மணம் பரவும்.
சிறிதளவு வெினிகரை ஒரு கிண்ணத்தில் வைத்து உள்ளே வைத்தால் துர்நாற்றம் குறைய வாய்ப்பு உள்ளது.
காய்கறி பெட்டிகள் மற்றும் மூலைகளில் கசிந்த உணவுகள் இருக்கிறதா என்று அடிக்கடி பாருங்கள்.
வெங்காயம், பூண்டு போன்ற அதிக வாசனை உள்ள பொருட்களை மூடிய டப்பாவில் சேமிக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜை அதிகமாக நிரப்பாமல் பொருட்களை ஒழுங்காக வைத்தால் காற்றோட்டம் சீராக இருக்கும்
உணவுப் பொருட்களை எப்போதும் மூடியுள்ள பெட்டிகளில் வைத்தால் கெட்ட வாசனை பரவாமல் இருக்கும்.