04 Nov 2026

வீட்டில் இருக்கும் பிரட்டில் இப்படி ஒரு சூப்பர் இனிப்பா?

Credit: Getty

1பால் பிரட் 8 துண்டுகள், மைதா, பால், ரோஸ் எசன்ஸ், பொடித்த சர்க்கரை, சோடா உப்பு மற்றும் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

தே. பொருட்கள்

அரை கப் சர்க்கரை, அரை கப் தண்ணீர், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகு தயாரிக்கவும்.

சர்க்கரை பாகு

சர்க்கரைப் பாகு வெதுவெதுப்பானதும் அதில் இரண்டு துளிகள் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

ரோஸ் எசன்ஸ்

பிரட் துண்டுகளின் ஓரங்களில் உள்ள பழுப்பு நிறப் பகுதிகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாகப் பிரிக்கவும்.

பிரட் தயாரிப்பு

பிரட் துண்டுகளைப் பாலில் நனைத்துப் பிழிந்து மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

மென்மை

அரைத்த பிரட்டுடன் சோடா உப்பு மற்றும் மைதா சேர்த்து கைகளில் ஒட்டாத பதத்தில் நன்றாகப் பிசையவும்.

பிசைதல்

பிசைந்த மாவை சிறிய அளவிலான உருண்டைகளாக எடுத்து விரிசல் இல்லாமல் மென்மையாக உருட்டவும்.

உருண்டை

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட் உருண்டைகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

பொரித்தல்

பொரித்த உருண்டைகளைத் தயாரித்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்தல்

சர்க்கரைப் பாகிலிருந்து உருண்டைகளை எடுத்து பொடித்த சர்க்கரையில் நன்றாகப் புரட்டவும்.

அலங்காரம்