12 AUG 2025
யூடியூப் கணக்கில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து, அதில் இருந்து பலரும் வருமானம் பெற்று வருகின்றனர்.
பல கிரியேட்டர்கள் யூடியூப் மூலம் வருமானம் ஈட்டி வரும் நிலையில், புதியதாக வரும் கிரியேட்டர்கள் பணம் எளிதில் சம்பாதிக்க முடியாத சூழலை யூடியூப் உருவாக்கியுள்ளது.
அதாவது, யூடியூப் நிறுவனம் YouTube Partner Programme அம்சத்தில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் யூடியூப் கிரியேட்டர்கள் வீடியோக்கள் மூலம் பணம் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு டபுள் வாட்ச் அவர்ஸ் கட்டாயமாக மாறியுள்ளது.
யூடியூபின் Watch Hours அதிகரித்துள்ளதன் காரணமாக அந்த நிறுவனம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பிப்ரவரி 1, 2027 முதல் கிரியேட்டர்கள் 365 நாட்களில் 8,000 Watch Hours கொண்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அப்படி இல்லையென்றால் 90 நாட்களில் 20 மில்லியன் Shorts Views கொண்டு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
முன்னதாக 4,000 Watch Hours அல்லது 10 மில்லியன் Shorts Views மட்டுமே போதுமானதாக இருந்த நிலையில், தற்போது அது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
Short Earnings-க்கும் பழைய மற்றும் புதிய பயனர்கள் இருவருக்குமே யூடியூப் ஒரு புதிய ரூல்ஸை அறிமுகம் செய்துள்ளது.
பிப்ரவரி 1, 2027 முதல் விளம்பரம் மற்றும் வருமானம் பெற கிரியேட்டர்கள் 90 நாட்களில் 10 மில்லியன் Short Views பெற வேண்டும் என கூறியுள்ளது.