Credit: Instagram

22  November 2026

ஆகாஷம்லோ ஒக்க தாரா படத்தில் துல்கர் வாங்கிய சம்பளம்?

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகனாக, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருபவர் துல்கர் சல்மான்.

இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பேக் டூ பேக்  திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது.

மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் நுழைந்த இவருக்கு, மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது.

மலையாள ஸ்டார் மம்முட்டியின் மகனான இவருக்கு, சினிமாவில் முதல் படமே ஓரளவு சிறப்பான வரவேற்பை  கொடுத்திருந்தது.

கடந்த 2012ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான செகண்ட் ஷோ என்ற ஹாரர் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தார்.

மேலும் தமிழில் முதல் திரைப்படமாக அமைந்தது, இயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் என படம்.

இதன் பிறகு தனது 2வது தமிழ் படத்திலே தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்தார்.

இதன் பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக எந்த படங்களும் அமையவில்லை, அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பக்கம் சென்றார்.

மகாநதி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் தனது ஆளுமையை பிடித்த துல்கர், தற்போதுவரை வருடத்திற்கு ஒரு படம் என்ற விகிதத்தில் தெலுங்கில் நடிக்கிறார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் ஆகாஷம்லோ ஒக்க தாரா என்ற படம் வெளியானது. இதில் நடிக்க ரூ 18 கோடியை சம்பளமாக வாங்கினாராம்.