17 Mar 2025
Credit: Freepik
ஒரு செல்போன் பேட்டரியின் முக்கிய பணி, உங்கள் பயன்பாட்டிற்கு தேவையான ஆற்றலை வழங்குவதுதான்.
இது திரை, ஆப், கேமரா ஆகியவை இயங்க பெரிதும் உதவுகிறது.
திரை ஒளிதான் அதிக பவரை இழுக்கிறது. மேலும், நீங்கள் பவர் பட்டனை ஆப் செய்தாலும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை பின்னணியில் இயங்கும்.
நெட்வொர்க் பலவீனமாக இருக்கும்போது, செல்போன் மீண்டும் மீண்டும் டவரை தேடுவதால் பேட்டரி காலியாகிவிடும்.
மேப் மற்றும் பிற ஆப்கள் எல்லா நேரமும் இயங்குவதால் பேட்டரியை இழுக்க தொடங்கும்
அதிகப்படியான வெப்பம் வேதியியல் திறனை குறைத்து, பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை இயங்க செய்யும்.
லித்தியம்-அயன் மின்கலங்கள் காலப்போக்கில் தங்கள் திறனை இழக்கும்.
அசையும் வால்பேப்பர்களையும், பவர் பட்டனை ஒவ்வொரு முறையை அழுத்தும்போதும் அதிக பவரை எடுத்துக்கொள்கின்றன.
சரியான நேரத்தில் செல்போனை அப்டேட் செய்யாமல் இருப்பதும் பேட்டரி ஆயுளையும் கெடுத்துவிடும்.
பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க அதை 20% முதல் 80% வரை சார்ஜ் செய்து வைப்பதும், அதிகப்படியான வெப்பத்திலிருந்து பாதுகாப்பதும் சிறந்தது.