30 AUG 2026
Credit: GETTY
நாம் தினமும் வானத்தில் விமானம் பறப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு வானில் பறக்கும் விமானங்களில் ஒரு ஒற்றுமை இருக்கும். அதுதான் விமானத்தின் நிறம்.
வெவ்வேறு நிறுவனங்களின் விமானங்களாக இருந்தாலும், பெரும்பாலான விமானங்களின் நிறம் வெள்ளையாகவே இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா.
விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதன் காரணமாக வெப்பம் குறைதல், எரிபொருள் சேமிப்பு, பராமரிப்பு எளிதாவது உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
வண்ண நிறங்களில் பெயிண்ட் அடிப்பதால் விமானத்தின் எடை சுமார் 544 கிலோ வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு விமானத்தின் எடை அதிகரிப்பதன் மூலம், விமானம் 8 பயணிகளுக்கு சமமான சுமையை சுமக்கும் நிலை ஏற்படுமாம்
இதன் காரணமாக தான் உலக அளவில் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்திலேயே உள்ளன. அவை முழுவதுமாக வண்ணம் அடிக்கப்படுவதில்லை.
வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது. இதன் காரணமாக, விமானத்தின் மேற்பரப்பு வெப்பத்தை அதிக அளவு உறிஞ்சாமல் இருக்கும்.
இதன் காரணமாக விமானம் சூடாகாமல் தவிர்க்கப்படுவதோடு மட்டுமன்றி, குளிரூட்டும் அறைக்கு ஏற்படும் அதிக சுமையும் தடுக்கப்படும்.
விமானங்களின் நிறம் வெள்ளையாக இருப்பதன் காரணமாக, அவற்றின் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறிய அளவிலான சேதங்களை கூட எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
சூரிய ஒளியில் மற்ற நிறங்கள் மிகவும் எளிதாக மங்கிவிடும் நிலையில், வெள்ளை நிறம் மங்காமல் இருக்கும் என்பதால் அடிக்கடி பெயிண்ட் அடிக்க வேண்டிய தேவை இல்லை.