29 July 2025

2026-ன் சிறந்த காய்கறி முட்டைகோஸ் - காரணம் என்ன?

Credit: GETTY

ஆரோக்கியம் மற்றும் சமையல் நிபுணர்களின் கூற்றுப்படி 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த காய்கறியாக முட்டைகோஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முட்டைகோஸ்

மிகவும் மலிவான விலையில், அதே சமயம் பல ஆரோக்கிய நன்மைகளை இந்த காய் கொண்டு இருப்பதின் காரணமாக இதற்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மலிவு

2026 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட தளங்களில் முட்டைகோஸ் தான் பேசுபொருளாக இருந்தது.

பேசுபொருள்

இதன் காரணமாக மிகவும் பிரபலமான பின்ட்ரெஸ்ட் நிறுவனம் இதனை 2026 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமாக காய்கறி என்று முட்டைகோஸுக்கு பெயரிட்டுள்ளது.

பின்ட்ரெஸ்ட்

இந்த முட்டைகோஸை பயன்படுத்தில் உலகம் எங்கிலும் ஸ்டீக்ஸ், கிம்சி உள்ளிட்ட பல்வேறு பிரபலமான உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உணவுகள்

இந்த முட்டைகோஸில் மிகவும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட், குறைந்த கலோரி மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்கள் உள்ளன.

சத்துக்கள்

100 கிராம் முட்டைகோஸில் 2.5 கிராம் நார் சத்து உள்ளது. இதன் காரணமாக உணவில் முட்டைகோஸை சேர்த்துக்கொள்வதன் மூலம் நார்சத்து தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளலாம்.

நார் சத்து

இந்த முட்டைகோஸில் வைட்டமின் சி, கே, ஏ, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் சி,ஏ

ஒரு கப் பச்சையான முட்டைகோஸில் சுமார் 36 மில்லி கிராம் வைட்டமின் சி சத்து உள்ளது. இது ஒருவரின் வைட்டமின் சி தேவையை பெற பகுதியளவு உதவி செய்யும்.

வைட்டமின் சி

இந்த முட்டைகோஸில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும். இதிலுள்ள வைட்டமின் கே எலும்புகளை பாதுகாக்கும்.

கொழுப்பு