07 NOV 2026
Credit: Getty
21 NOV 2026
Credit: Getty
லேப்டாப், ஃபிரிட்ஜ், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாத பொருட்களுக்கு சற்று வித்தியாசமான பிளக் இருக்கும்.
அதாவது, மற்ற பிளக்குகளுக்கு வெறும் இரண்டு பின்கள் மட்டுமே இருக்கும் நிலையில், லேப்டாப், ஃபிரிட்ஜ் ஆகியவற்றுக்கு மட்டும் மூன்று பின்கள் இருக்கும்.
இந்த நிலையில் தான், மற்ற மின்சாதன பொருட்களை போலவே இவற்றுக்கும் இரண்டு பின்கள் போதுமானதாக இருக்காதா என பலருக்கும் தோன்றும்.
உண்மையில் லேப்டாப், ஃபிரிட்ஜ் கூடுதலாக உள்ளது என நாம் நினைக்கும் அந்த ஒரு பின் தான் பல்வேறு வேலைகளை செய்கிறது.
பிளக்கில் உள்ள மூன்றாவது பின் வெறும் வடிவமைப்பு மட்டும் அல்ல, அது மனிதர்களின் உயிரை காப்பாற்றும் முக்கிய அம்சமும் ஆகும்.
பிளக்கில் மேலே உள்ள அந்த மூன்றாவது பின் தரை இணைப்பு என அழைக்கப்படுகிறது. அதற்கு பின்னால் பெரிய அறிவியல் உள்ளது.
இந்த மூன்றாவது பின் பிளக்கில் உள்ள மற்ற பின்களை விடவும் சற்று நீளமானதாக இருக்கும். மற்ற இரண்டு பின்கள் உள்ளே செல்வதற்கு முன்னதாகவே இது சென்றுவிடும்.
அதாவது, அந்த பெரிய பின் முதலில் உள்ளே செல்லும்போது மின்சாரம் பாய்வதற்கு முன்னதாகவே நமக்கான பாதுகாப்பு வளையம் உண்டாகிவிடும்.
அந்த மூன்றாவது பின் தடிமனாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. அதனை தவறுதலாக வேறு எந்த துலையிலும் நுழைக்க கூடாது என்பதற்காக தான்.
அறிவியல் கூற்றுப்படி, ஒரு கம்பி தடிமனாக இருக்கும் பட்சத்தில் அதன் மின்தடை மிகவும் குறைவாக இருக்கும்.