21 August 2026

TV Vs AC : ரிமோர்ட்கள் வெவ்வேறு நிறத்தில் இருக்க காரணம் என்ன?

Credit: Getty

அனைவரது வீட்டிலும் இருக்ககூடிய மிக முக்கிய பொருள் தான் ரிமோர்ட். டிவி, ஏசி, பேன் என அனைத்திற்கும் ரிமோர்ட் உள்ளது. 

ஆனால், இந்த ரிமோர்ட்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். குறிப்பாக டிவி ரிமோர்ட் கறுப்பு நிறத்தில் இருக்கும் நிலையில், ஏசி ரிமோர்ட் வெள்ளை நிறத்தில் இருக்கும். 

இவ்வாறு டிவி மற்றும் ஏசி ரிமோர்ட்கள் கருப்பு, வெள்ளை என வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதற்கான பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன.

மின்சாதன பொருட்களின் வடிவங்களுக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளதை போலவே அவற்றின் நிறத்திற்கு பின்னாலும் பல காரணங்கள் உள்ளன. 

ஏசி ரிமோர்ட்களை போலவே, சுவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் ஏசியின் இன்டோர் யூனிட்டும் ரிமோர்ட் உடன் பொறுந்தும் வகையில் வெள்ளை நிறத்திலே இருக்கும். 

ஏசி தயாரிப்பு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதை நோக்கமாக கொண்டுதான் இந்த வெள்ளை நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் மற்றும் படுக்கை அறையில் அமைதியான சூழலை உருவாக்க வெள்ளை நிறம் உதவுதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தான் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகின்றன.

வெள்ளை நிறம் வெப்பத்தை மிக குறைவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. ஏசி ரிமோர்டுக்கு வெள்ளை நிறத்தை தேர்வு செய்ய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

இதேபோல டிவி ரிமோர்ட் அதன் பயன்பாடு காரணமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது. அதாவது ரிமோர்ட் அதிகம் பயன்படுத்தப்படும் கருவியாக உள்ளது. 

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் அடிக்கடி தொட்டு பயன்படுத்தக்கூடிய கருவியாக டிவி ரிமோர்ட் உள்ள நிலையில், அது எளிதில் கறையாகிவிடும் என்பதற்காக கறுப்பு நிறத்தில் உள்ளது.