08 SEP 2026
Credit: Freepik
அடிக்கடி தாகம் ஏற்படுவதும் ஒரு சில பிரச்சனைகளின் அறிகுறியாகும்.
அதிக வெப்பமாக உணரும்போதோ அல்லது வியர்க்கும்போதோ அடிக்கடி தாகம் எடுப்பது இயல்பானது.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது, அதிக தாகம் ஏற்படலாம்.
அதிக உப்பு அல்லது காரமான உணவுகளை சாப்பிடுவதும் தாகத்தை அதிகரிக்கக்கூடும்.
அதிகமாக டீ அல்லது காபி அருந்துவது வாய் வறட்சி மற்றும் அதிக தாகத்திற்கு வழிவகுக்கும்.
தாகத்துடன் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அதை புறக்கணிக்க கூடாது.
தொடர்ச்சியான தாகம் சில சமயங்களில் உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறியாக இருக்கலாம்.
வாய் அதிகப்படியான வறண்டு போவதும், அடிக்கடி தண்ணீர் குடிக்க நேரிடலாம்.
சில மருந்துகள் எடுத்து கொள்வதும் வாய் வறட்சியுடன் அதிக தாகத்தை தரும்.
பல நாட்களாக எந்த காரணமும் இல்லாமல் உங்களுக்கு அதிக தாகம் எடுத்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.