29 Nov 2026

பிரசவத்திற்குப் பின் தாய்மார்கள் செய்ய வேண்டியவை என்ன..?

Credit: GETTY

தொப்பையை குறைக்க அணியும் பெல்ட்டுகள் உடலில் உள்ள கொழுப்பை நிரந்தரமாக கரைக்காது. இவை வயிற்றை உள்ளே அழுத்தி, தோற்றத்தை மட்டுமே சற்று ஒல்லியாக காட்டும்.

உண்மை

பெல்ட் அணியும்போது வயிற்றுப் பகுதியில் அதிக வெப்பம் உருவாகி வியர்வை வெளியேறும். இதனால் உடலில் உள்ள நீர் எடை மட்டுமே குறையுமே தவிர, கொழுப்பு குறையாது.

வியர்வை

அதிக இறுக்கமான பெல்ட்டுகளை நீண்ட நேரம் அணிவது சுவாசப் பிரச்சனை மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். இது வயிற்று தசைகளை வலுவிழக்க செய்யும் வாய்ப்புள்ளது.

ஆபத்து

சிசேரியனுக்கு பிறகு அணியும் போஸ்ட்-பார்டம் பெல்ட் தையல்களுக்கு நல்ல பாதுகாப்பை தரும். இது முதுகு மற்றும் வயிற்று பகுதிக்கு ஆதரவு அளித்து வலியை குறைக்க உதவுகிறது.

ஆதரவு

அறுவை சிகிச்சை முடிந்த தாய்மார்கள் எந்த வகை பெல்ட் அணிய வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். தையல்கள் முழுமையாக ஆறிய பின்னர் பயன்படுத்தலாம்.

மருத்துவர்

பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்க வெறும் பெல்ட் மட்டும் நிச்சயமாக போதாது. ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இணைந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடற்பயிற்சி 

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சத்தான மற்றும் சமச்சீரான உணவுகளைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

உணவு

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்க உதவும். இது பிரசவத்திற்கு பின் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையையும் சரிசெய்யும்.

தண்ணீர்

அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர் அனுமதித்தவுடன் தினமும் மெதுவான நடைப்பயிற்சியை தொடங்கலாம். இது இரத்த ஓட்டத்தை சீராக்கி வயிற்று பகுதி தசைகளை வலுப்படுத்தும்.

நடைப்பயிற்சி

சில மாதங்களுக்கு பிறகு வயிற்று தசைகளை வலுப்படுத்தும் எளிய உடற்பயிற்சிகள் மற்றும் மூச்சு பயிற்சிகளை செய்யலாம். கடினமான உடற்பயிற்சிகளை தொடங்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

ஆலோசனை