Credit: Instagram

24   November 2026

நடிகர் தனுஷின் 57வது படத்தை இயக்கும் இயக்குநர் இவரா?

Credit: Instagram

தென்னிந்திய திரைத்துறையில் தனது நடிப்பு, இயக்கம் மற்றும் பாடல்கள் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் தனுஷ்.

இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நுழைந்து. தற்போது பான் இந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பணியாற்றுகிறார்.

இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் கர மற்றும் ஓ.எம் என இரு படங்கள் வெளியாகியது.

இதில் இறுதியாக வெளியான ஓ.எம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த நிலையில், 2026 நவம்பர் 20ல் வெளியாகிறது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ், காவல்துறை உளவாளியாக நடித்து தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவர், லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி 56 என்ற படத்தில் பணியாற்றுகிறார்.

இப்படமானது மதுரை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இயக்கப்பட்டுவரும் திரைப்படமாம்.

டி56 திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துவருகிறார்.

இப்பபாமானது 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாக தயாராகிவரும் நிலையில், சிறப்பான படமாக தனுஷுக்கு அமையும் என கூறப்படுகிறது.

தனுஷ் இதையடுத்து தனது 57வது திரைப்படத்தில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இணைகிறாராம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.