Credit: Instagram
27 November 2026
Credit: Instagram
மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் தனது திரைப்படங்களின் மூலமாக பிரபலமான இயக்குநரானவர் ஜித்து மாதவன்.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் இதுவரை சினிமாவில் வெறும் 3 படங்கள் மட்டுமே வெளியானாலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.
இவர் கடந்த 2023ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ரோமாஞ்சம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநராக நுழைந்தார்.
வித்தியாசமான ஹாரர் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் வெளியான இந்த படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது.
அதன் பிறகு ஃபகத் ஃபாஸிலின் ஆவேஷம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் சிறப்பான வரவேற்பை கொடுத்தது.
இதன் பிறகு பைங்கிளி மற்றும் பாலன் : தி பாய் போன்ற திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சீன். இப்படத்தை இயக்கி தமிழில் இயக்குநராக நுழைந்துள்ளார்.
இதில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், 2026 நவம்பர் 6ம் தேதியில் வெளியானது.
இதன் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் யாருடன் திரைப்படத்தில் இணைகிறார் என கேள்விகள் எழும்பிய நிலையில், தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜித்து மாதவன், தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது.