28 Mar 2025
Credit: Instagram
போதையேறி புத்திமாறி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் துஷாரா விஜயன்.
இவருக்கு பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் திருப்புமுனையாக அமைந்தது.
மீண்டும் ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து கழுவேத்தி முருகன், அநீதி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தனுஷின் தங்கையாக இவர் நடித்திருந்த ராயன் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
மேலும் ரஜினிகாந்த்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் சரண்யா என்ற முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக விக்ரமிற்கு ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துஷாரா விஜயன் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக மலையாளத்தில் கட்டாளன் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.