Credit: Instagram

18 october 2026

பைசன் பட 1 வருட நிறைவு.. ஷூட்டிங் கிளிக்ஸ் பகிர்ந்த துருவ் விக்ரம்!

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகராக, ஒரு படத்திற்காக எதையும் செய்யும் நாயகனாக மக்களிடையே போற்றப்படுபவர் துருவ் விக்ரம்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சியான் விக்ரமின், ஒரே மகன் ஆவார். தனது தந்தையை போல துருவ்-வும் சினிமாவில் பணியாற்ற விரும்பினார்.

தனது சிறுவயதில் இருந்த தந்தை விக்ரமின் திரைப்படங்களை பார்த்துவளர்ந்த நிலையில், தனது குழந்தை பருவத்திலே சினிமாவின் மீது ஆர்வம் வந்ததாம்.

இவர் கடந்த 2019ம் ஆண்டில் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் நடிகராக நுழைந்தார்.

இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், இதன் பின் நடிகராக வாழ்க்கையை தொடங்கியிருந்தார்.

இதன் பிறகு வர்மா, மகான் போன்ற திரைப்படங்களிலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது.

இதற்கு பின் நிஜமான கதையில், முதல் முறையாக முன்னணி நயாகனாக பல கஷ்டங்களுடன் இவர் நடித்திருந்த திரைப்படம்தான் பைசன்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையி முன்னிட்டு வெளியானது.

இந்த படத்தில் துருவ் விக்ரம் கிட்டான் என்ற கபடி வீரனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

இந்த படமானது வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்த புகைப்படங்களை துருவ் விக்ரம் பகிர்ந்துள்ளார்.