Credit: Instagram

20 october 2026

தனுஷின் நடிப்பில் பார்ட் 2 படங்களாக உருவாகும் மூவிஸ் லிஸ்ட்!

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவரும் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் நடிகர் தனுஷ். 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான கஸ்தூரி ராஜாவின் மகனாக இவர், சினிமாவில் அவரின் இயக்கத்தில் மூலமாகவே நாயகனாக நுழைந்தார்.

அந்த விதத்தில் தனுஷின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அவருக்கு முதல் முதலாக அமைந்த திரைப்படம்தான்  துள்ளுவதோ இளமை (2002).

இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஷெரின் நடித்திருந்தார். இப்படம் தனுஷுக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.

சினிமாவில் ஆரம்பத்தில் தனுஷ் நடித்துவந்த திரைப்படங்களில், அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது.

அவரின் உடல் மற்றும் அவரின் நடிப்பு குறித்து தமிழ் சினிமாவில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டது. அதையெல்லாம் கடந்து தற்போது சினிமாவில் ஒரு  அங்கமாகவே இருக்கிறார்.

இவரின் நடிப்பில் தமிழ் மொழி மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும் தனுஷ் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர், எழுத்தாளர் என பல்வேறு பணிகளை செய்துவருகிறார்.

இவரின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த விதத்தில் இவர் நடிக்கும் பார்ட் 2 படங்கள் குறித்து பார்க்கலாம்.

தனுஷின் நடிப்பில் வட சென்னை 2, புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2, ஓம் 2 மற்றும் மாரி 3 போன்ற படங்கள் எடுக்க திட்டமிடப்பட்டுவருகிறதாம்.