08 September 2026
Credit: Instagram
நடிகர் சூர்யாவின் தம்பியும், சினிமாவில் அதிரடி நாயகனாக படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருபவர் கார்த்தி.
சினிமாவின் ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்று நுழைந்த இவர், இயக்குநர் மணிரத்தினத்தின் படங்களில் பணியாற்றியிருந்தார்.
சூர்யாவின் ஆயுத எழுத்து போன்ற படங்களில் மணிரத்தினதுடன், கார்த்தி உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
பின் சினிமாவில் நடிகராக நடிக்கவேண்டும் என எண்ணிய இவர், இயக்குநர் அமீரின் இயக்கத்தில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் நடிகராக நுழைந்தார்.
மதுரை பாஷையில் பேசி, நடித்து இப்படத்தின் மூலமாக தமிழ் மக்களை கவர்ந்தார். பருத்திவீரன் இப்போதுவரை பலருக்கு பிடித்த படமாக இருக்கிறது.
இந்த படத்திற்கு பின், தற்போது வரையிலும் சினிமாவில் நடிகராக படங்களில் பணியாற்றிவருகிறார். மேலும் இவருக்கு ரசிகர்களும் அதிகம்.
தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நாயகனாக படங்களில் நடித்துவரும் கார்த்தி, தெலுங்கு மொழியை சரளமாக பேசுவார்.
இவரின் நடிப்பில், 2026ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும் படம்தான் சர்தார் 2. இதில் கார்த்தி ஸ்பை-யாக நடித்துள்ளார்.
சர்தார் 1-ன் தொடர்ச்சியாக இயக்குநர் இ.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் நடிக்க நடிகர் கார்த்தி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா? ரூ 18 - ரூ 20 கொடிகளை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.