Credit: Instagram
15 November 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் தற்போது இளம் கதாநாயகியாக மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படுபவர் ஸ்ரீலீலா.
இவர் கடந்த 2017ம் ஆண்டில் சித்ராங்கதா என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார்.
இதன் பிறகு 2019ம் ஆண்டில் கன்னட சினிமாவில் வெளியான கிஸ் என்ற திரைப்படத்தில், நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையானார்.
மேலும் தெலுங்கில் 2021ம் ஆண்டில் பெல்லி சாண்டா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தார். இந்த படத்தில் நடனமாடி பிரபலமானார்.
நடிகை ஸ்ரீலீலா சினிமாவில் நடிகையாக எவ்வளவு பிரபலமானவரோ, அதே போல அவரின் நடனமும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது
தமிழில் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில், பராசக்தி என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து நுழைந்தார்.
இதன் பிறகு இவரும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிவந்த நிலையில், தனுஷின் ஓம் திரைப்படத்தில் நாயகியாக இணைந்தார்.
இந்த ஓ.எம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தனுஷின் ஓ.எம் திரைப்படத்தில் அவரின் மனைவி ரோஜா- என்ற வேடத்தில் நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அவரின் திரை நேரம் குறைவாக அமைந்துள்ள நிலையில், இதில் நடிக்க ரூ 3 கோடிகளை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.