Credit: Instagram
01 November 2026
Credit: Instagram
தென்னிந்திய இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்து வருபவர்தான் மலையாள நடிகை நஸ்ரியா நஸீம். இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்.
இவர் மலையாள பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஃபகத் ஃபாசிலின் மனைவியும் அவர். இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
நடிகை நஸ்ரியா நஸீம் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கிய நிலையில், பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இனியானது நடித்துள்ளார்.
இவருக்கு கதாநாயகியாக மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழியிலும் முதல் அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் நேரம்.
இயக்குநர் ஆல்போல் புத்ரன் இயக்கத்தில் இந்த படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நஸ்ரியா நடித்து ஹிட் கொடுத்திருந்தார்.
இதன் பிறகு அட்லீயின் இயக்கத்தில் நேரடியாக தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் பெற்றார்.
இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முதல் ஆர்யா வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடனும் ஜோடியாக இணைந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் அவர் ரீ என்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம்தான் சீன்.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மாயா என்ற ஆக்ஷன் நாயகியாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு நடிகை நஸ்ரியா நஸீம் சுமார் ரூ 3 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.