13 April 2025 

உடலில் நீரிழப்பின் அறிகுறிகள் யாவை?

Credit: Getty Image

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது நீரிழப்பு ஏற்படுகிறது. இது உடல் சரியாகச் செயல்படுவதைத் தடுக்கிறது.

நீரிழப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகள் தொடர்ச்சியான தாகம் மற்றும் வாய் வறட்சி ஆகும். 

உடலில் நீர்ச்சத்து குறையும்போது உடல் சேர்வடையும். உடல் பலம் குறையும். 

தலையில் கனமான உணர்வு, தலைச்சுற்றல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 

உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் தோன்றினால் அல்லது குறைந்த அளவில் வெளியேறினால், அது உடலில் நீர்ச்சத்து குறைவதன் அறிகுறியாக இருக்கும். 

நீரிழப்பு சருமத்தை வறண்டு பொலிவிழந்து போகச் செய்யும். 

உடலில் நீர் பற்றாக்குறை இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யலாம்.