27 SEP 2026
Credit:unsplash
தன்னிச்சையான வலி நிவாரணி பயன்பாடு சிறுநீரகத்தை பாதிக்கும் என CDSCO எச்சரித்துள்ளது.
மருத்துவரின் அனுமதியின்றி மாத்திரைகள் உட்கொள்வது கிருமி எதிர்ப்பாற்றலை குறைக்கும்.
வலி நிவாரணிகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுடன் மட்டுமே விற்கப்பட வேண்டும்.
சாதாரண காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைத் தன்னிச்சையாக வாங்குவதைத் தவிர்க்கவும்.
மருத்துவர் குறித்த நாட்களுக்கு மட்டும் மாத்திரைகளைச் சாப்பிடவும்.
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் வலி நிவாரணிக்குமுன் மருத்துவரை அணுக வேண்டும்.
காய்ச்சல் நீடித்தால் சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரைச் சந்திக்கவும்.
நோயாளியின் சிறுநீரக செயல்பாட்டைப் பார்த்தே மருத்துவர் மருந்து தர வேண்டும்.
மருத்துவர்கள் வலி நிவாரணிகளைக் குறைந்த நாட்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
கிருமியின் தன்மையை ஆராய்ந்தே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.