12 SEP 2026
Credit: Getty
சியா விதைகளை தண்ணீரில் ஊறவைக்காமல் நேரடியாக உலர்வாக விழுங்குவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் இரண்டு ஸ்பூன்களுக்கு மேல் அளவுக்கு அதிகமாக சியா விதைகளை உட்கொள்ளக்கூடாது.
சியா விதைகள் உடலில் உள்ள நீரை உறிஞ்சுவதால், இவற்றை சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
செரிமானக் கோளாறு அல்லது வயிறு உப்பசம் பிரச்சனை உள்ளவர்கள் திடீரென அதிக அளவில் சாப்பிடக்கூடாது.
ரத்த அழுத்த மருந்துகள் அல்லது ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் எடுப்பவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி சாப்பிடக்கூடாது.
விதைகளால் அலர்ஜி அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் சியா விதைகளைத் தவிர்க்க வேண்டும்.
மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் விதைகளை அப்படியே வாயில் போட்டு தண்ணீர் குடிக்கக்கூடாது.
செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க இரவு தூங்குவதற்கு தொட்டு முன்பாக இதைச் சாப்பிடக்கூடாது.
விதைகளின் ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் இருக்க அவற்றை அதிக சூடான கொதிநீரில் கலக்கக்கூடாது.
ஆரோக்கியத்திற்காக சாப்பிடும் போது சியா விதைகளுடன் அதிகளவில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.