15 July 2025

கொத்தவரங்காய் சாப்பிடும் முன் இதை அறிவோம்..!

Credit: GETTY

கொத்தவரங்காய் புரதம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த காய்கறியாகும்.

ஊட்டச்சத்து

கொத்தவரங்காயில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

எதிர்ப்புச்சக்தி

இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்தசோகை போன்ற நோய்களின் அபாயத்தை கொத்தவரங்காய் கணிசமாகக் குறைக்கிறது.

இரத்தசோகை

குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் தாதுக்கள் இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது.

எலும்புகள்

கொத்தவரங்காயில் உள்ள வைட்டமின் ஏ சத்தானது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கண்பார்வை

செரிமானத்தை மேம்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்தையும் இந்த காய்கறி நன்கு பாதுகாக்கிறது.

செரிமானம்

வயிற்றுப் புண் (அல்சர்) போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க கொத்தவரங்காய் உதவுகிறது.

வயிற்றுப்புண்

கொத்தவரங்காயில் அதிகளவில் நிறைந்துள்ள நார்ச்சத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதயம்

இது குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்டதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென உயர்த்தாது.

நீரிழிவு

பாரம்பரிய மருத்துவக் கருத்துகளின்படி, வாதம் மற்றும் பித்தம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

வாதபித்தம்