21 AUG 2025
Credit: getty
சமையலறை, பாத்ரூம் போன்ற இடங்களில் பயன்படுத்திய அதிக அழுக்குள்ள துணிகளை நேரடியாக மெஷினில் போட வேண்டாம். முதலில் அழுக்கை அகற்றிய பிறகு துவைப்பது நல்லது.
அதிக எடை மற்றும் தடிமன் கொண்ட போர்வைகளை வாஷிங் மெஷினில் துவைப்பதைத் தவிர்க்கவும். அதிக எடை மெஷினின் செயல்பாட்டை பாதித்து சேதத்தை ஏற்படுத்தலாம்.
‘Dry Clean Only’ என குறிப்பிடப்பட்ட ஆடைகளை மெஷினில் துவைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் துணியின் தன்மை மற்றும் தோற்றம் பாதிக்கப்படலாம்.
பட்டு போன்ற மென்மையான ஆடைகளை வாஷிங் மெஷினில் துவைப்பதைத் தவிர்ப்பது நல்லது. மெஷினின் சுழற்சியால் துணியின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மாடர்ன் டிசைன் மற்றும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை கவனமாகக் கையாள வேண்டும். மெஷினில் துவைத்தால் அவற்றின் அலங்காரம் அல்லது வடிவம் விரைவில் பாதிக்கப்படலாம்.
ஜீன்ஸ், ஜாக்கெட் உள்ளிட்ட ஆடைகளின் ஜிப்பை மூடாமல் மெஷினில் போடக்கூடாது. திறந்த ஜிப் துணியையும் மற்ற ஆடைகளையும் சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
துணிகளை மெஷினில் போடுவதற்கு முன் அனைத்து பாக்கெட்டுகளையும் கட்டாயம் சரிபார்க்கவும். நாணயம், சாவி போன்ற பொருட்கள் மெஷினின் உட்பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
லெதரால் செய்யப்பட்ட ஜாக்கெட், பேன்ட் போன்ற ஆடைகளை வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டாம். தண்ணீர் மற்றும் சுழற்சி காரணமாக அவற்றின் தோற்றமும் தரமும் பாதிக்கப்படலாம்.
கம்பளி போன்ற மென்மையான துணிகளுக்கு அதிக கவனம் தேவை. அவற்றை மெஷினில் துவைப்பதைவிட துணியின் பராமரிப்பு வழிமுறையைப் பின்பற்றுவது சிறந்தது.
லேஸ், எம்பிராய்டரி அல்லது ஜர்தோசி வேலைப்பாடு கொண்ட ஆடைகளை மெஷினில் போடுவதைத் தவிர்க்கவும். சுழற்சியின்போது வேலைப்பாடுகள் சிக்கி கிழியும் வாய்ப்பு உள்ளது.
முத்து, ஸ்டட், செயின் போன்ற அலங்காரங்கள் பொருத்தப்பட்ட ஆடைகளை கவனமாகத் துவைக்க வேண்டும். மெஷின் சுழற்சியால் அலங்காரங்கள் கழன்று மற்ற துணிகளையும் சேதப்படுத்தலாம்.