27 Nov 2026

ஒரு சில பழக்கங்கள் உங்கள் வயதை அதிகமாக காட்டும்..!

Credit: Freepik

நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த பழக்கங்கள் உங்களை வயதானவராக காட்ட செய்யும்.

அன்றாடம்

அதிகப்படியான மன அழுத்தம் உங்கள் சருமத்தை பாதித்து, அது முன்கூட்டியே முதுமையடைய செய்யும்.

மன அழுத்தம்

தூக்கமின்மை சருமத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், முகத்தின் பொலிவை பறித்து, முன்கூட்டியே முதுமை தோற்றத்தை கொடுக்கும்.

தூக்கமின்மை

துரித உணவுகளும் இனிப்புகளும் சருமத்தின் வயதாவதை விரைவுபடுத்தி, முன்கூட்டிய முதுமைக்கு வழிவகுக்கும்.

துரித உணவு

பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. இருப்பினும், வீட்டிற்குள்ளும் புற ஊதா கதிர்கள் சருமத்தை சேதப்படுத்தி வயதான தோற்றத்தை தரலாம்.

சன்ஸ்கிரீன்

அளவுக்கு அதிகமாக புகை மற்றும் மது அருந்துவது முன்கூட்டியே முதுமை அடைவதற்கான முக்கிய காரணம். இது சருமத்தை பொலிவிழக்க செய்யும்.

புகை

நீர் பற்றாக்குறைவால் சருமம் ஈரப்பதத்தை இழக்கும். இதனால், சருமம் வறண்டு, பொலிவிழந்து முன்கூட்டியே முதுமை தோற்றத்தை கொடுக்கலாம்.

நீர் பற்றாக்குறை

உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சியின்மை உடலில் இரத்த ஓட்ட குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

உடல் செயல்பாடு

இதனால், உடலில் இரத்த ஓட்டம் குறைந்து சோர்வாகவும் வயதான தோற்றமளிப்பை கொடுக்கும்.

இரத்த ஓட்டம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடல் நல பிரச்சனைகளுடன், முன்கூட்டியே முதுமை தோற்றத்தை கொடுக்கும். 

ஒரே இடத்தில்