15 SEP 2026
Credit: Getty
வங்கிகள் ரூ.2,000-க்கு குறைவான UPI (Unified Payment Interface), RuPay பண பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்காது என அரசு கூறியுள்ளது.
எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) கட்டணம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து நிதித்துறை அமைச்சகம் (Ministry of Finance) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை அமைப்புகள், RuPay பவர்டு டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2,000-க்கும் குறைவாக மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க கூடாது என தடை விதித்துள்ளது.
இதன் மூலம் அதிக அளவிலான பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.
நிதித்துறை அமைச்சகம் , RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு குறைவான பண பரிவர்த்தனைகளுக்கு நேரடி அல்லது மறைமுக கட்டணமும் விதிக்க கூடாது என கூறியுள்ளது.
இந்த கட்டண முறை முற்றிலும் வணிகர்களுக்கானது மட்டும் ஆகும். தனிநபர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது.
அதாவது, மாதத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு, அந்த நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணத்தை வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக வசூல் செய்யக்கூடாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எனவே, சாமானிய மக்கள் எந்தவித தடையுமின்றி வழக்கமாக யுபிஐ மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.