23 Nov 2026
Credit: Freepik
ஏலக்காய் சாப்பிடும் வாய்ப்பை ஒருபோதும் மிஸ் செய்யக்கூடாது. இது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
நாம் ஒவ்வொரு நாளும் ஏலக்காயை ஏதேனும் ஒரு வழியில் எடுத்து கொள்கிறோம். இது சுவைக்கு மட்டுமின்றி, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
தினமும் ஏலக்காயை மெல்லும் பழக்கம் நமது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கும். வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் பிரச்சனையை தீர்க்கும்.
ஏலக்காயை மெல்லுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். உங்கள் மனதையும், உடலையும் அமைதிப்படுத்தும்.
ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்வது பதட்டம் மற்றும் மனச்சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஏலக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதன் நறுமணம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஏலக்காயில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும், சருமத்திற்கு பொலிவை தரவும் உதவும்.
மழைக்காலத்தில் இருமல் மற்றும் தொண்டை வலியில் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம். இது ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்ஜி போன்றவற்றிற்கு ஆறுதல் தரும்.
மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்புகளால் அவதிப்படுபவர்களுக்கு, ஏலக்காய் தண்ணீர் அருந்துவது நல்லது.
ஏலக்காய் விதைகளை மெல்லுவது உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, வாய் துர்நாற்றத்தைக் குறைத்து புத்துணர்ச்சி கொடுக்கும்.