19 AUG 2026

பாம்புகளுக்கு மனிதர்களை அடையாளம் தெரியுமா? 

Credit: GETTY

உலகில் 3,000-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் வாழ்கின்றன. அவற்றில் பல விஷத்தன்மை வாய்ந்தவை என்றாலும், அனாவசியமாக அவை மனிதர்களைத் தாக்குவதில்லை.

வகைகள்

பாம்புகள் தங்களின் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தால் மட்டுமே தாக்குகின்றன. பாம்புகள் பழிவாங்கும் என்ற கட்டுக்கதை நிலவினாலும், அவை பயத்தினால் மட்டுமே பதிலடி கொடுக்கின்றன.

தற்காப்பு

பாம்புகளுக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு என்ற பழைய கருத்து தவறானது. PubMed-ல் வெளியான ஆய்வுகளின்படி பாம்புகளுக்குக் குறிப்பிடத் தகுந்த நினைவாற்றல் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நினைவாற்றல்

உணவு கிடைக்கும் இடங்கள் மற்றும் பாதுகாப்பான மறைவிடங்களை பாம்புகள் நினைவில் வைத்து கொள்கின்றன. ஒருமுறை ஆபத்தைச் சந்தித்த பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்க்கும்.

வாழ்விடம்

பாலூட்டிகளுக்கு இருப்பது போல முகங்களை அடையாளம் காண உதவும் 'நியோகார்டெக்ஸ்' (Neocortex) மூளைப்பகுதி அவற்றுக்கு இல்லை.

முகம்

மனித முகங்களை அடையாளம் காண முடியாவிட்டாலும், பிற புலன்களால் சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்கின்றன. வாசனை, ரசாயன சிக்னல்கள் மற்றும் தரை அதிர்வுகளை கணிக்கும்.

புலன்கள்

பாம்பு தன் பிளவுபட்ட நாக்கை வெளியே நீட்டி காற்றில் உள்ள ரசாயனத் துகள்களைச் சேகரிக்கிறது. இதன் மூலம் தன் சுற்றிலும் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நடமாட்டத்தை உணர்கிறது.

நாக்கு

நாக்கால் சேகரிக்கப்பட்ட ரசாயனத் தகவல்களைத் தலையில் உள்ள 'ஜேக்கப்சன் உறுப்பு' (Jacobson's Organ) பகுப்பாய்வு செய்கிறது. இந்த உறுப்பின் மூலமே பழக்கப்பட்ட வாசனையை அறியும்.

உறுப்பு

பாம்பு பராமரிப்பு மையங்களில் தினமும் தங்களைக் கவனித்துக் கொள்ளும் நபர்களைப் பாம்புகள் உணர்கின்றன.

பராமரிப்பு

பாம்புகள் மனிதர்களை நினைவில் வைத்துப் பழிவாங்கும் என்பது முற்றிலும் அறிவியல் ஆதாரமற்ற கதையாகும்.

பழிவாங்கல்