15 Jan 2025
Credit: Freepik
இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலான மக்கள் உட்கார்ந்தே நேரத்தை செலவிடுகிறார்கள்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவது இரத்த ஓட்டத்தை குறைக்கும். இது நமது இருதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு 8-10 மணிநேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து அலுவலகத்தில் வேலை பார்ப்பது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும்.
இந்த 8 வகையான பயிற்சிகளை உட்கார்ந்து வேலை பார்க்கும்போது ஒவ்வொரு மணிநேரமும் மேற்கொள்வது முக்கியம்.
ஒவ்வொரு பயிற்சியும் முடிவதற்கு சுமார் 1 நிமிடம் ஆகும். இதன்பிறகு, நீங்கள் 1 நிமிடம் நடக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு படிக்கட்டின் உதவியை பெற்று 10 முதல் 15 புஷ் அப்களை செய்யலாம்.
ஒரு சேரில் உட்கார்ந்து உங்கள் கால் விரல்களை மேலும் கீழும் அசைக்கவும். இதை 10 முறை செட்களில் 3 முறை மீண்டும் செய்யலாம்.
படிக்கட்டுகளுக்கு அருகில் அல்லது தாழ்வான பொருளின் அருகே உட்காரவும். இதை ஒரு கைகளாலும் பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும்.
உங்கள் கைகளை மடக்கி நேராக நிற்கவும். பின்னர் உங்கள் உடலை ஒரு பக்கமாகவும், பின்னர் மறு பக்கமாகவும் நகர்த்தவும்.
ஸ்கிப்பிங் இல்லாமல் சுமார் 100 முறை கயிற்றில் குதிப்பது நல்லது. இது மிகவும் பயனுள்ள மற்றும் எளிதான பயிற்சியாகும்.