27 SEP 2026
Credit: Getty
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி பொழுதுபோக்கு செயலியாக மெட்டாவின் இன்ஸ்டாகிராம் உள்ளது.
இந்த செயலி பொழுதுபோக்கு மட்டுமன்றி, தொழில் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் சிறந்ததாக உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என பலரும் இன்ஸ்டாகிராம் செயலியை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
என்னதான் பொழுதுபோக்கு அம்சத்திற்கு இன்ஸ்டாகிராம் சிறந்ததாக இருந்தாலும், அதில் சில ஆபத்துகளும் உள்ளன.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை, மோசடிகளுக்கு உள்ளாகின்றன.
இந்த நிலையில் தான், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் இன்ஸ்டாகிராமில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
ஆனால், மெட்டாவின் விதிகள் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் இன்ஸ்டாகிராமில் என்ன செய்கிறார்கள் என்பதை நேரடியாக அறிந்துக்கொள்ள அனுமதிக்காது.
சில நாடுகளில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு, பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக தான் 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு Supervision அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை உறுதி செய்துக்கொள்ளலாம்.