24 Jan 2025

பச்சை வெங்காயத்தை உணவுடன் சாப்பிடலாமா? வேண்டாமா?

Credit: Freepik

பச்சை வெங்காயம் இல்லாமல் பலரும் உணவை சாப்பிடமாட்டார்கள்

வெங்காயம்

பிரியாணி, சிக்கன் ரைஸ், சாம்பார் சாதம் என எதுவாக இருந்தாலும் வெங்காயம் எப்போதும் உணவுடன் சாப்பிடப்படுகிறது.

சாதம்

உணவுடன் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது நன்மை பயக்குமா என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்மை

வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக்குகள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

ப்ரீபயாடிக்

வெங்காயத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் சி

பச்சையாக வெங்காயம் சாப்பிடுவது உடலை குளிர்வித்து வெப்ப தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.

குளிர்ச்சி

வெங்காயத்தில் உள்ள சல்பர் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

ஃபிளாவனாய்டு

வெங்காயம் கொழுப்பை குறைத்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

இதய நோய்

வெங்காயத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பொட்டாசியமும் உள்ளது.

பொட்டாசியம்

எனவே, தாராளமாக உணவுடன் பச்சையாக வெங்காயத்தை எடுத்து கொள்ளலாம். 

உணவு