24 Jun 2025
Credit: Freepik
காபியில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும் என்று நினைக்கிறார்கள்.
அதனால்தான் சிலர் இன்றும் சிறிய கீறல்கள் மற்றும் காயங்கள் மீது காபி பொடி வைக்கின்றனர்.
காபி தூள் கிருமி நீக்கம் செய்யப்பட்டது அல்ல. இது காயங்கள் மீது பயன்படுத்தினால் பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.
சிலருக்கு காபி தூள் பயன்படுத்துவதால் அழற்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆழமான காயங்கள், தீக்காயங்கள் மீது காபி தூளை பயன்படுத்துவது ஆபத்தானது.
காபி பொடி இரத்தப்போக்கை நிறுத்தும் என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
காயம் ஏற்பட்டால், முதலில் அதை சுத்தமான தண்ணீர் கழுவி, கிருமிநாசினி பயன்படுத்துவது சிறந்தது.
காபி தூள் ஒருபோதும் முறையான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது.
வீக்கம், புண்கள், வலி, இரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
காபியில் உள்ள சில சேர்மங்கள் காயம் குணப்படுத்துமா என்று ஆராய்ச்சி நடக்கிறது. ஆனால், இதுவரை நிரூபிக்கப்படவில்லை.