06 OCT 2026
Credit: Getty
உலக அளவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆட்டோமொபைல் சந்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்க்கொண்டுள்ளது.
இதன் காரணமாக உலக அளவில் இருக்கும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இனி பெட்ரோல் கார்களை தயாரிக்கலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கு வந்துள்ளனர்.
எந்த ஒரு துறையாக இருந்தாலும் சந்தை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் தான் பொருட்கள் தயாரிக்கப்படும்.
இந்த நிலையில் தான், சர்வதேச அளவில் பொதுமக்கள் மத்தியில் பெட்ரோல் கார்களுக்கான தேவை பெருமளவு குறைந்துள்ளது.
அதாவது, ஈரான் போருக்கு பிறகு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல் கார்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களையே பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர்.
சீனாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மாற்றம் நிகழ்ந்த நிலையில், தற்போது உலக அளவில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதாவது, உலக அளவில் வெறும் 50 சதவீதம் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் பொதுமக்களால் வாங்கப்படுகிறது.
மீதமுள்ள 50 சதவீதம் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் ரக கார்களையே பொதுமக்கள் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக இனி வரும் காலங்களில் பெட்ரோல் கார்களின் உற்பத்தி வெகுவாக குறையும் என்றும், பெட்ரோல் கார்களே சந்தைக்கு வராமல் போகும் சூழலும் உருவாகும் என கூறப்படுகிறது.