16 Jan 2026

பட்ஜெட் 2026:  ஸ்மார்ட்போன், டிவி விலைகள் உயர வாய்ப்பு?

Credit: pexels

பிப்ரவரி 1 ஆம் தேதி 2026-27க்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன.

அந்தவகையில், ஸ்மார்ட்போன், டிவி மற்றும் மடிக்கணினி விலைகள் 2 மாதங்களுக்கு முன்பு தான் 4-8% வரை விலை அதிகரித்தன.

பெரும்பாலான மின்னணு பொருட்களின் விலைகளில் வரும் மாதங்களில் உயரலாம் என கணிக்கப்பட்டிருந்தாலும், பட்ஜெட்டில் இந்த துறைக்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.

ஏற்கெனவே, சிப் விலைகள் கடந்த காலாண்டில் 50%, இந்த காலாண்டில் மேலும் 40-50% அதிகரித்துள்ளன.

வரும் மாதங்களில் சிப்களின் விலைகள் மேலும் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மெமரி சிப்களின் விநியோகம் ஒரு சவாலாக மாறியுள்ளதாக தொலைபேசி உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஸ்மார்ட்போன்களில் விலை நவம்பரில் விலைகள் 7% அதிகரித்தன. தொடர்ந்து, ஜனவரியில் அதன் விலைகள் 10% அதிகரித்தன. பிப்ரவரியில் மேலும் 4% அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

மடிக்கணினி விலைகளும் ஏற்கனவே 5-8% வரை அதிகரித்துள்ளன. முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களும் விரைவில் விலை உயர்வைக் குறிப்பிட்டுள்ளன

இந்த சூழ்நிலையில், பட்ஜெட் நெருங்குவதால் நூகர்வோர் ஏற்கனவே 'வெயிட் அண்ட் வாட்ச்' என்ற மனநிலையில் உள்ளனர்.

மூலப் பொருட்கள், வரி விலக்குகள், என ஏதாவது ஒரு வழியில் நிதி அமைச்சர் மின்னணு சாதங்களின் தொடர் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.