15 Jan 2026

பட்ஜெட் 2026 - வருமான வரியில் மாற்றம்? வேறு என்ன எதிர்பார்க்கலாம்?

Credit: Social Media

இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வான மத்திய பட்ஜெட் 2026க்கு இன்னும் சில வாரங்களே உள்ளது.

பிப்ரவரி 1 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 88வது மத்திய பட்ஜெட் இதுவாகும். 

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட்டாகும்.

இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது தொடர் பட்ஜெட்டாகவும் இது அமைந்துள்ளது.

தொடர்ச்சியாக 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த ஒரே இந்திய நிதியமைச்சர் என்ற பெருமையும், நிர்மலா சீதாராமனுக்கே சொந்தம்.

மொரார்ஜி தேசாய் உருவாக்கிய 10 பட்ஜெட் சாதனைக்கு ஒரே ஒரு பட்ஜெட் குறைவானது.

ரயில்வே, சிறு குறு தொழில் வளர்ச்சி, பாதுகாப்பு, பசுமை ஆற்றல் போன்றவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி தொடர்பான புதிய சீர்திருத்தங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது