23 August 2026

டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானியின் சம்பளம் இவ்வளவா?

Credit: Instagram

தற்போது பான் இந்திய நடிகையாக அனைவரின் மத்தியிலிலும், பெரும் புகழை பெற்றிருப்பவர்தான் கியாரா அத்வானி.

 2014ம் ஆண்டில் இந்தி சினிமாவில், இயக்குநர் கபீர் சதானந்த் இயக்கத்தில் வெளியான ஃபக்லி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார்.

மேலும் இவருக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தகியில் மிகவும் பிரபலத்தை கொடுத்த திரைப்படம் எம்.எஸ்.தோனி. இதில் சாக்ஷி என்ற வேடத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமாவில் கலக்கிவந்த இவர், இயக்குநர் கோரட்டால சிவா இயக்கத்தில், பரத் அனே நேனு என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நுழைந்தார்.

இதுவரை இவர் தெலுங்கில் மகேஷ் பாபா, ராம் சரண் போன்ற நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து வெப் தொடர்கள், திரைப்படங்கள் போன்றவற்றை லீட் நாயகியாக நடித்து மேலும் புகழை பெற்றிருந்தார்.

இந்த வரிசையில் இவர் கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ள படம்தான் டாக்ஸிக். இதில் நாதியா என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, நடிகர் யாஷுடன் நெருக்கமான காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார்.

கன்னட சினிமாவில் இவர் அறிமுகமாகியுள்ள டாக்ஸிக் படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் இனையத்தில் பரவிவருகிறது.

யாஷுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ள இப்படத்திற்காக சுமார் ரூ 15 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.