Credit: Instagram
09 November 2026
Credit: Instagram
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, தென்னிந்திய மக்கள் வரை பிரபலமாக இருந்துவருபவர் ஜான்வி கபூர்.
நடிகை ஜான்வி கபூர் வேறுயாருமில்லை, தமிழ் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார். தனது தாயை போல இவரும் படங்களில் நடிக்கிறார்.
இவர் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான தடாக் என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார்.
முதல் படமானது இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.
இவ்வாறு தொடர்ந்து இந்தி சினிமாவில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மற்றும் சினிமாவில் மக்களை கவர்ந்திருந்தார் ஜான்வி கபூர்.
இவ்வாறு இந்தியில் நடித்துவந்த இவருக்கு, முதல் தெலுங்கு திரைப்படமாக அமைந்தது தேவரா பார்ட் 1. இதில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியானார்.
இந்த திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் நடனம் மற்றும் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதன் பிறகும் இந்தி மொழியில் படங்களில் நாயகியாக நடிக்க, இறுதியாக இவரின் நடிப்பில் பெடி என்ற தெலுங்கு படம் வெளியாகியிருந்தது.
மேலும் இவரின் கைவசத்தில் லாக் ஜெ காலே திரைப்படம், அல்லு அர்ஜுனின் ராக்கா திரைப்படம் மற்றும் மேலும் புதிய படம் ஓன்று உள்ளதாம்.
சமீபத்தில் நேர்காணலில் பேசிய ஜான்வி கபூர், தமிழில் தனக்கு பிடித்த நடிகை சாய் பல்லவி என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.